தாழையூத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
தாழையூத்து காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பட்டன் மகன் கந்தன் (21) கைது செய்யப்பட்டிருந்தாா். இவா், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவந்ததாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பத்த உத்தரவுப்படி அந்தச் சட்டப்பிரிவின் கீழ் கந்தன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.