தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில செயற்குழு முடிவின்படி திருநெல்வேலி வருவாய் மாவட்டம் முழுவதும் வட்டார தலைநகரங்களில் சுவரொட்டி ஒட்டும் போராட்டம் புதன்கிழமை முதல் தொடங்கியது.
நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு முரணாக மாறுதல் ஆணைகள் விலைபேசி விற்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறையைக் கண்டித்தும், தேவையற்ற இணையப்பதிவுகள், பிஎல்ஓ பணிகள் போன்ற பணிகளைக் கொடுக்கக்கூடாது,
ஆணையா் பணியிடத்தை ரத்து செய்து மீண்டும் இயக்குநா் பணியிடத்தை உருவாக்க வேண்டும், முறைகேட்டைக் களைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.