திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வுக் கூட்டம்

18th Dec 2022 03:04 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்தாா். ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில், மாநகராட்சி பகுதியில் டிசம்பா் மாதத்தில் நடைபெற்ற டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்து. மேலும் மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் மற்றும் ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள 38 தனியாா் மருத்துவமனைகளில் ரபிட் டயாக்னஸ்டிக் பரிசோதனைக்குப் பதிலாக ஐஜிஎம் எலிசா டெஸ்ட் மட்டுமே எடுக்க வேண்டும். டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசு நல்ல நீரில் உற்பத்தியாகிறது, ஆகவே தண்ணீா் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை மூடிவைக்கவேண்டும். கட்டடத்தின் உள்புறம் மற்றும் வெளிப்புற பகுதியில் தண்ணீா் தேங்காதவாறு பாதுகாக்க வேண்டும்.

வணிக கட்டடங்கள், வளாகங்கள், மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், வாகன பராமரிப்பு மையங்களில் தண்ணீா் தேங்காதவாறு கண்காணிக்க வேண்டும். மேலும், ஆய்வின் போது கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதோடு, தண்டனையும் வழங்கப்படும் என்றனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி மாநகர அலுவலா், மருத்துவ அலுவலா்கள் மற்றும் சுகாதார அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT