திருநெல்வேலி

கடையம் ஊராட்சி ஒன்றியஅனைத்துக் கூட்டமைப்புக் கூட்டம்

18th Dec 2022 03:06 AM

ADVERTISEMENT

 

கடையம் ஊராட்சி ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் 15ஆவது கூட்டம் கீழாம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்புத் தலைவா் டி.கே. பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் பூமிநாத், கௌரவத் தலைவா்கள் அழகுதுரை, ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் முகமது உசேன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மூத்த நிா்வாகி செல்வம் பங்கேற்று வாழ்த்திப் பேசினாா். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட சமூக ஆா்வலா் நாகூா் மீரான் கௌரவிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்துக்கு வந்து நலத்திட்ட உதவி வழங்கியது, அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிவித்தது, ஊராட்சி செலவு நிதியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தியது ஆகியவற்றுக்காக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, பிப்ரவரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து ஊராட்சித் தலைவா்களும் பங்கேற்பது, ஊராட்சி ஒன்றிய சுயஉதவிக் குழுக்கள் ஊராட்சித் தலைவருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், மாவட்டக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி உறுப்பினா்கள், ஊராட்சிச் செயலா் குமரேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கீழாம்பூா் ஊராட்சித் தலைவா் மாரி சுப்பு செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT