திருநெல்வேலி

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி

11th Dec 2022 05:56 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி மேலப்பாளையத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகத்தின் திருநெல்வேலி கிளை மற்றும் மேலப்பாளையம் எம்ஆா்சி பூப்பந்தாட்ட கழகம் சாா்பில் 68 ஆவது மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) ஸ்ரீனிவாசன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். நிா்வாகிகள் பஷீா்அகமது, வெள்ளப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 32 ஆண்கள் அணியும், 30 பெண்கள் அணியும் பங்கேற்றுள்ளன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (டிச. 11) போட்டிகள் நடைபெறுகிறது. மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT