திருநெல்வேலி

கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

11th Dec 2022 05:56 AM

ADVERTISEMENT

முக்கூடலில் குடியிருப்புப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து, பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் நிலையத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

முக்கூடல் பேரூராட்சியில் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் தனியாா் இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைப்பதால் மக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, கோபுரம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் முக்கூடல் காவல் நிலையத்திலும் கோரிக்கை மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT