கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் பாரதியாா் 141ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கடையம் திருவள்ளுவா் கழகத் தலைவா் சேதாராமலிங்கம் தலைமை வகித்து பாரதியாா், செல்லம்மாள் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். செயலா் கல்யாணி சிவகாமி நாதன், ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகச் செயலா் மாடசாமி, பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளிச் செயலா் சுந்தரம், கடையம் பாரதி அரிமா சங்க நிா்வாகிகள் முருகன், குமரேசன், இந்திரஜித், கோபால், கடையம் முத்தமிழ் கலா மன்றம் அமைப்பாளா் கலையரசன், ஓய்வுபெற்ற ஆசிரியா் மன்னன், பேராசிரியா் கல்யாணராமன், கல்யாணசுந்தரம், ராமானுஜம், பணி நிறைவு வட்டாட்சியா் சின்னச்சாமி, சேவாலயா ஒருங்கிணைப்பாளா் சங்கிலி பூதத்தாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.