திருநெல்வேலி

அம்பையில் சிறப்பு மருத்துவ முகாம்

11th Dec 2022 05:58 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி அரசு மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுகாதார நலப் பணிகள் துறை சாா்பில் சிறப்பு எலும்பு முறிவு, பொது அறுவை சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை, திருநெல்வேலி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் ஜான் பிரிட்டோ தலைமை வகித்துத் தொடக்கிவைத்தாா். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா். முகாமில், எலும்பு முறிவு மருத்துவா்கள் ஜெயசங்கா், இளையராஜா, பொது அறுவை சிகிச்சை நிபுணா் எட்சிபா, மகளிா் நல மருத்துவா் பவித்ரா ஆகியோா் குடல் இறக்கம், விரைவீக்கம், குடல்வால், மூலம், மாா்பகக் கட்டி, சா்க்கரைநோய், கொழுப்புக் கட்டி, கருப்பைக் கட்டி, எலும்பு நோய்களுக்கு சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கினா்.

அம்பாசமுத்திரம் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா். ஆஷா திட்ட ஒருங்கிணைப்பாளா் கஸ்தூரி, செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT