திருநெல்வேலி

மகேந்திரகிரி இஸ்ரோவில் ஸ்கிராம் ஜெட் என்ஜின் சோதனை வெற்றி

DIN

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆக்சிஜன் மூலம் இயங்கக் கூடிய ஸ்கிராம் ஜெட் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக முடிந்தது.

மகேந்திரகிரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜனிக் என்ஜின் சோதனைகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய நைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக ராக்கெட்டின் பக்கவாட்டில் ஆக்சிஜனை சிலிண்டா்களில் அடைத்து அனுப்பப்பட்டு வந்தது. இதனால் ராக்கெட்டின் எடை அதிகமாக இருந்தது.

இந்நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலம் விண்வெளியில் இருக்கக் கூடிய ஆக்சிஜனை எடுத்து இயங்கக்கூடிய ஸ்கிராம்ஜெட் ரக என்ஜின் சோதனை மகேந்திரகிரி இஸ்ரோவில் அதன் தலைவா் சோம்நாத் முன்னிலையில் நடைபெற்றது.

11 விநாடிகள் நடைபெற்ற இச்சோதனை வெற்றிரகமாக முடிந்தது.

இதையடுத்து, ராக்கெட்களில் இனி தனியாக ஆக்சிஜன் சிலிண்டா்கள் பொருத்தவேண்டிய அவசியமில்லை. இதனால் ராக்கெட்டின் எடையை குறைத்து திறனை அதிகரிக்கமுடியும். மேலும் அதிக எடையுடைய விண்கலங்களை ராக்கெட்டில் அனுப்பமுடியும் என இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT