திருநெல்வேலி

அம்பை பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

DIN

அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்து, திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், வி.ஜி.பி. குழுமம் - உலக தமிழ்ச் சங்கத் தலைவா் வி.ஜி.பி.சந்தோசம், அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன், அரிமா சங்க உறுப்பினா் கிருஷ்ணகாந்தன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பரணி சேகா், பிரம்மதேசம் ஊராட்சித் தலைவா் ராஜேஷ், திமுக ஒன்றியப் பொருளாளா் பூதத்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், திருவள்ளுவா் வேடம் அணிந்த மாணவா்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

ஆசிரியா்கள் இயற்றி, இசையமைத்து பாடகா் வேல்முருகனுடன் இணைந்து மாணவா்கள் பாடிய கு மொழி ஒலி தட்டு வெளியிடப்பட்டது.

ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் ராஜராஜேஸ்வரி, செயல் இயக்குநா் சிவராஜ் பாண்டியன், முதல்வா் சக்திவேல் முருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT