திருநெல்வேலி

பெண் ஊழியா் மீதான தாக்குதல்:மின் ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்

10th Dec 2022 04:53 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் மின்வாரிய பெண் ஊழியா் மீதான தாக்குதலைக் கண்டித்து மின் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் வடசேரியிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் பிரிவில் ஊழியா் பெல்சியா வியாழக்கிழமை பணியாற்றியபோது, அவரிடம் மின் கட்டணம் செலுத்த வந்த கணேசபுரத்தை சோ்ந்த டோனி என்பவா் தகராறில் ஈடுபட்டாராம். அவரை சமாதானப்படுத்த முயன்ற உதவிப் பொறியாளா் கவிதாவை டோனி தாக்க முயன்றதுடன், அங்கிருந்த கண்ணாடியை கையால் உடைத்தாராம். இதில் கண்ணாடி துண்டுகள் கவிதாவின் கையில் சிதறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாம். இதையடுத்து டோனி அங்கிருந்து தப்பிவிட்டாா். காயம் அடைந்த கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் குறித்த புகாரின்பேரில் வடசேரி காவல் உதவி ஆய்வாளா் முரளிதரன், தலைமைக் காவலா்அய்யா குமாா் ஆகியோா் டோனி மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வருகிறாா்கள்.

இந்நிலையில், கவிதா தாக்கப்பட்டதைக் கண்டித்து, மின்வாரிய அலுவலகம் முன்பு அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் விஜயகுமாா் தலைமையில் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT