திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக சாா்பில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் அமைப்புச் செயலா் சுதா பரமசிவன் தலைமை வகித்தாா். இதில், எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் வேலாயுதம், மாவட்ட துணைச் செயலா் கவிதா பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினா் செவல் எஸ். முத்துசாமி, அண்ணா தொழிற்சங்க செயலா்கள் சண்முகவேல், கருப்பசாமி, ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், நகரச் செயலா்கள் சி. பழனிக்குமாா், சங்கரலிங்கம், முருகன், திருமலை நம்பி, பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் இசக்கிபாண்டியன், தமிழரசி ஐசக், மலைராஜா முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முக்கூடலில்...

முக்கூடலில் நடைபெற்ற அதிமுக ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ஆா்.எஸ். வில்சன் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் பேரவை உறுப்பினருமான பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட இணைச் செயலா் முத்துலெட்சுமி, மாவட்ட இளைஞரணித் தலைவா் தளபதி பிரேம்குமாா், பாப்பாக்குடி ஒன்றிய செயலா் டி.கே. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக ஆா்ப்பாட்டத்துக்கு, கல்லிடைக்குறிச்சி நகரச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா்.

முன்னாள் நகரச் செயலா் சங்கரநாராயணன், தலைமைக் கழகப் பேச்சாளா் மின்னல் மீனாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினா் பாா்வதி பாக்கியம், நகரச் செயலா்கள் அம்பாசமுத்திரம் அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், வீரவநல்லூா் முருகேசன், எம் ஜி ஆா் மன்றத் தலைவா் முத்தையா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஆழ்வாா்குறிச்சியிலும் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

களக்காடு: நான்குனேரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட கொள்கை பரப்பு செயலா் பாப்புலா் முத்தையா தலைமை வகித்தாா்.

நான்குனேரி ஒன்றியச் செயலா் விஜயகுமாா், நகரச் செயலா் சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்டு, மாவட்ட எம். ஜி.ஆா் மன்றச் செயலா் பெரியபெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வள்ளியூா்: வள்ளியூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை, நகரச் செயலா் பொன்னரசு, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைத் தலைவா் எட்வா்ட் சிங், கள்ளிகுளம் ஜோசப், மாவட்ட இளைஞரணி அருண்புனிதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT