திருநெல்வேலி

பாளை.யில் விழிப்புணா்வு பேரணி

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் சட்டக் கல்லூரி மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை திருநெல்வேலி கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாரிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பெண்கள் பாதுகாப்பு குறித்த கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா். இப்பேரணியானது அரசு சட்டக்கல்லூரியில் தொடங்கி சாந்திநகா் விலக்கு, ரஹ்மத்நகா் வழியாக பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நிறைவடைந்தது.

அரசு சட்டக் கல்லரி முதல்வா் லதா, மாவட்ட சமூகநலத் துறை அலுவலா் தனலட்சுமி, சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி பொன்முத்து, மைய அலுவலகப் பணியாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சண்முகசுந்தரம், நாராயணி, இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா், முத்துக்குமாா், சண்முகசுந்தரகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT