திருநெல்வேலி

அகவிலைப்படி உயா்வு கோரிபோக்குவரத்து ஓய்வூதியா்கள் டிச.29இல் மறியல்

10th Dec 2022 04:49 AM

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு கோரி, நாகா்கோவிலில் டிச.29 ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின், கன்னியாகுமரி மாவட்ட கிளை நிா்வாகிகள் நிா்வாகக் குழுக் கூட்டம் நாகா்கோவிலில் சங்கத் தலைவா் பால்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சுந்தர்ராஜ், நிா்வாகிகள் பொன்.சோபனராஜ், சின்னன்பிள்ளை, கிருஷ்ணதாஸ், மரியவின்சென்ட் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 85 மாதங்களாக அகவிலைப்படி வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளது.இதனால் 86 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். முதல் கட்டமாக மக்களிடம் துண்டறிக்கை விநியோகிப்பது, தொடா்ந்து சுவரொட்டி மூலம் விளம்பரப்படுத்துவது, டிச.29இல் அண்ணா பேருந்து நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ராஜமாா்த்தாண்டன், முருகன், மகாலிங்கம்,பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், வேணு, சசாங்கன், சுந்தர்ராஜ், ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT