திருநெல்வேலி

சேரன்மகாதேவி கோயிலில் சிறப்பு பூஜை

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் காா்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், சேரன்மகாதேவி ராஜாஜி தெருவிலுள்ள வண்டிமலைச்சி அம்பாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT