திருநெல்வேலி

சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

10th Dec 2022 04:52 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் காமராஜ்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, ஒன்றிய துணைச் செயலா்கள் திருக்கல்யாணி, அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் சேவியா் விஜேஷ் வரவேற்றாா்.

இதில், தெற்கு ஒன்றியச் செயலா் ஆ. பாலமுருகன் சிறப்புரையாற்றி புதிய உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கினாா். கூட்டத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலா் பேராசிரியா்அன்பழகன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, பத்துப்போ் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட பிரதிநிதிகள் சித்திரை, அந்தோணி ஜெயசீலன், முன்னாள் ஒன்றிய துணை செயலா் ஜெயராம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கிளைச் செயலா் ரனீஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT