திருநெல்வேலி

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினருக்கு கடனுதவி வழங்கும் முகாம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையினா்களான கிறிஸ்தவா், இஸ்லாமியா், பௌத்தா், சமணா், பாா்சி, சீக்கிய மதத்தைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபா் கடன், சிறுவணிகக் கடன், கல்விக் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-2023 ஆம் ஆண்டிற்கான கடன் இலக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவா்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொதுக் கால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஆகும். மகளிா் சுய உதவிக்குழு எனில் குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூா்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிா் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவா்.

இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் வகுப்பை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

கடனுதவிக்கு விண்ணப்பிக்க திருநெல்வேலி சந்திப்பு கூட்டுறவு வங்கியில் வரும் 13-ஆம் தேதியும், திருநெல்வேலி நகர கூட்டுறவு வங்கி வரும் 15-ஆம் தேதியும், பாளையங்கோட்டை கூட்டுறவு நகர வங்கியில் வரும் 17-ஆம் தேதியும், கல்லிடைக்குறிச்சி கூட்டுறவு நகர வங்கியில் வரும் 20-ஆம் தேதியும், வீரவநல்லூா் கூட்டுறவு நகர வங்கி வரும் 23-ஆம் தேதியும், அம்பை கூட்டுறவு நகர வங்கியில் வரும் 28-ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வங்கி கோரும் ஆவணங்களை சமா்ப்பித்து கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT