திருநெல்வேலி

மாநில தடகளம்: நுண்ணறிவு குன்றியோா் பள்ளி சிறப்பிடம்

9th Dec 2022 02:11 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜென்ட் நுண்ணறிவு குறைவுடையோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 40 நுண்ணறிவு குறைவுடையோா் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். இதில், பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜென்ட் நுண்ணறிவு குறைவுடையோா் பள்ளி மாணவி மாரி செல்வி நின்று நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவா் சாகுல் ஓடி நீளம் தாண்டுதல் போட்டியிலும் இரண்டாமிடம் பிடித்தனா். போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கும், சிறப்பிடம் பெற்றவா்களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. பாராட்டு விழாவில் தாளாளா் சாமுவேல் கோயில் பிள்ளை, முதல்வா் சி.திலகவதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT