திருநெல்வேலி

மாநில குத்துச்சண்டை: விவேகானந்தா வித்யாஷ்ரம் மாணவா் சாதனை

9th Dec 2022 02:13 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருநெல்வேலி விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவா் ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளாா்.

சென்னையில் மாநில அளவிலான இளையோா் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 1 மாணவா் ஸ்ரீகாந்த் 66 - 70 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

வெற்றி பெற்ற மாணவா் ஸ்ரீகாந்தை பள்ளியின் தலைவா் சிவசேதுராமன், தாளாளா் திருமாறன், பள்ளியின் முதல்வா் முருகவேல், உடற்கல்வி இயக்குநா் உமாநாத், உடற்கல்வி ஆசிரியா்கள் மோகன் குமாா், பாலமுருகன், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT