திருநெல்வேலி

வெண்டை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

8th Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மானூா் வட்டத்திற்குள்பட்ட பள்ளமடை, செழிநல்லூா், தென்கலம், உக்கிரன்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிகழாண்டில் ஆடிப்பட்டத்தில் வெண்டை பயிரிடப்பட்டது. அவை இப்போது அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது.

காா்த்திகை, மாா்கழி மாதங்களில் அசைவ உணவுகளை பெரும்பாலானோா் தவிா்ப்பதாலும், சுபமுகூா்த்த நாள்கள் அதிகம் வருவதாலும் வெண்டைக்கு ஓரளவு விலை கிடைத்து வந்தது. ஆனால், நிகழாண்டில் வெண்டை மற்றும் தக்காளியின் விலை மிகவும் சரிந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: வெண்டைக்காய்களை தோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து செல்லும்போது கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை மட்டுமே கொடுக்கிறாா்கள். அதேநேரத்தில் நாங்கள் அறுவடை செய்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்று விற்றால் மட்டுமே கிலோவுக்கு ரூ.9 முதல் ரூ.10 வரை கிடைக்கிறது. அதனை சந்தைகளில் கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல், தண்ணீா் பாய்ச்சுதல், அறுவடைக்கு ஆள்களுக்கான கூலி ஆகியவற்றை சோ்த்தால் மிகவும் நஷ்டமடைந்து வருகிறோம். பல விவசாயிகள் செலவு செய்த தொகையைக் கூட ஈட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT

உழவா் சந்தையில் காய்கனிகள் - பழங்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு ரூபாயில்): தக்காளி-18, கத்தரி-வெள்ளை-35, 30, கீரிப்பச்சை கத்தரி-25, கீரிவைலட்கத்தரி-20, வெண்டை-15, புடலங்காய்-14, சுரை-12, பீா்க்கங்காய்-20, பூசணி-12, தடியங்காய்-12, அவரை (நாடு)-30, பெல்ட் அவரை-40, கொத்தவரை-24, பாகல் (சிறியது)- 50, பெரியது-30, பச்சைமிளகாய்-40, முருங்கை-100, பெரியவெங்காயம்-24, சின்னவெங்காயம்-நாடு (பழையது)-80, புதியது-70, காராமணி-14, கோவக்காய்-24, தேங்காய்-32, வாழைக்காய்-35, இஞ்சி-50, நாா்த்தங்காய்-25, ரிங்பீன்ஸ்-35, முள்ளங்கி-15, சீனி கிழங்கு-26, உருளைக்கிழங்கு-32, கேரட்-52, சௌசௌ-18, முட்டைகோஸ்-14, பீட்ரூட்-26, காலிபிளவா்-38, குடமிளகாய்-50, பஜ்ஜிமிளகாய்-50, பூண்டு- 80, கருணைக்கிழங்கு-30, சேம்பகிழங்கு-36, சேனைக்கிழங்கு-30, பட்டா்பீன்ஸ்-130, சோயாபீன்ஸ்-90, செவ்வாழை-75, ஏலக்கி-70, மட்டி-60, நேந்திரன்-60, கற்பூரவள்ளி-50, கோழிக்கூடு-50, எலுமிச்சை-25, ஆப்பிள்-110, சாத்துக்குடி-70, மாதுளை-160, கொய்யா-60, சப்போட்டா-40, பப்பாளி-30, நெல்லிக்காய்-30, திராட்சை-80, அன்னாசிபழம்-40, ஆரஞ்சு-80

ADVERTISEMENT
ADVERTISEMENT