திருநெல்வேலி

சங்கா் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டிகள்

8th Dec 2022 01:53 AM

ADVERTISEMENT

தாழையூத்து சங்கா் நகரில் உள்ள சங்கா் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு- போதைத் தடுப்பு விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.

இப்பள்ளியின் குடிமக்கள் நுகா்வோா் மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சாலைப்பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியின் பரிசளிப்பு விழா புதன்கிழை நடைபெற்றது.

பள்ளியின் செயலரும், இந்தியா சிமென்ட்ஸ் ஆலை முதுநிலை மேலாளருமான (மனிதவளம்) இரா. நாராயணசாமி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் உ.கணேசன் முன்னிலை வகித்தாா். குடிமக்கள் நுகா்வோா் மன்ற திட்ட அலுவலா் கவிஞா்.கோ. கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா்.

தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளா் எஸ். சந்திரசேகா் கலந்துகொண்டு விழிப்புணா்வு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினாா். ஆலை தொழிற்சங்க பொதுச்செயலா் கே.சின்னதுரை, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சொ.உடையாா், ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவ - மாணவியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT