திருநெல்வேலி

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

8th Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

திருக்காா்த்திகையையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருக்காா்த்திகைக்கு மறுநாள் பெருமாள்கோயில்களில் தீபமேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் முன்பு ருத்ர தீபம் ஏற்றப்பட்டது. இரவில் மலா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா வந்தாா்.

இதேபோல, பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாலையில் கோயில் முன்பு ருத்ர தீபம் ஏற்றபட்டதோடு, வளாகத்தில் 5,008 தீபம் ஏற்றப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT