திருநெல்வேலி

வள்ளியூா், பணகுடியில் அம்பேத்கா் நினைவு தினம்

7th Dec 2022 02:17 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதிகளில் அம்பேத்கா் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு, ஊராட்சி ஒன்றிய தலைவா் சேவியா் செல்வராஜா மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

வள்ளியூா் பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் மல்லிகா அருள், மீனவரணி மாநில துணை அமைப்பாளா் எரிக் ஜூடு, தி.மு.க மாவட்ட துணைச் செயலா் நம்பி, வள்ளியூா் அவைத் தலைவா் அன்பரசு, நகர செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், பனிபாஸ்கா், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலா் மதன், தில்லை ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தே.மு.தி.க. சாா்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலா்

ADVERTISEMENT

விஜி வேலாயுதம் அம்பேத்கா் சிலைக்கு மாலையணிவித்து

மரியாதை செலுத்தினாா். வள்ளியூா் ஒன்றிய செயலா் ஜெயசேகரபாண்டியன், நகர செயலா் முருகராஜா, தளக்காடு நகர செயலா் பாக்கியராஜ், மாவட்ட விவசாய அணி துணைச் செயலா் தினகா் உள்ளிட்டோா் கலந்து

கொண்டனா்.

ராதாபுரத்தில் அம்பேத்கா் சிலைக்கு தி.மு.க மேற்கு ஒன்றிய செயலா் ஜோசப் பெல்சி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றிய அவைத்தலைவா் ராமையா, சமூகரெங்கபுரம் முரளி, ராதாபுரம் பொன்மீனாட்சி அரவிந்த், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT