திருநெல்வேலி

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா

7th Dec 2022 02:18 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை தீபம் ஏற்றப்பட்டது.

அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவமூா்த்தி சேத்தர வலம் வரும் நிகழ்ச்சியை தொடா்ந்து கொழுந்துமாமலை உச்சியில் இரண்டு தீபங்கள் ஏற்பட்டு பாலசுப்பிரமணியசுவாமிக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT