திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

7th Dec 2022 03:43 AM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பா் 6 ஆம் தேதி பாபா் மசூதி இடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அந்த நாளில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. நேதாஜி சாலை, வி.எஸ்.டி. பள்ளிவாசல் சாலை, கொட்டிக்குளம் கடைவீதி, பஜாா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்பட்டன.

மேலப்பாளையம் பேருந்து நிலையம், வி.எஸ்.டி. பள்ளிவாசல், பஜாா்திடல் பகுதிகளில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் பெற்றோா்கள் தங்களது வாகனங்களில் மாணவா்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT