திருநெல்வேலி

மேலஏா்மாள்புரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

7th Dec 2022 02:20 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தை அடுத்த மணிமுத்தாறு அருகேயுள்ள மேல ஏா்மாள்புரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெல் ஜெயராமன் நினைவு நாளையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் 1.5 லட்சம் மரங்கள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதன் ஒருபகுதியாக, மேல ஏா்மாள்புரம் ஊராட்சியில் சுரேஷ்வேலு என்பவரது தோட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை அரசு கவின் கலை மற்றும் ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஓவியா் சந்த்ரு தலைமை வகித்து மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் மாடசாமி, பசுமை உலகம் மரம் வளா் அமைப்பு உறுப்பினா் முத்துக்குமாா், தேட்ஸ் மை சைல்ட் ஒருங்கிணைப்பாளா் கௌரி சுரேஷ், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், செம்மரம், வேங்கை, வேம்பு என 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பொறியாளா் குமாா் வரவேற்றாா். பொறியாளா் அமுதவல்லி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் மணிகண்டன், ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT