பாபநாசம் அருகே திருப்பதியாபுரம் மலையடிவாரத்தில் முயலைப் பிடிப்பதற்காக, சிறுத்தை விரட்டிச் சென்ற விடியோ காட்சி பரவியதையடுத்து அக் கிராமத்தினா் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. பாபநாசம் வனச் சரகத்துக்கு உள்பட்ட திருப்பதியாபுரம், செட்டிமேடு, வேம்பையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், சிறுத்தை, கரடி, மிளா, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்துவிடும். இவற்றில் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட வீட்டு விலங்குகளை சிறுத்தை, கரடி போன்றவை வேட்டையாடிச் செல்லும்.
கடந்த சில நாள்களாக திருப்பதியாபுரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், நாய்களைத் துரத்திக் கடித்துச் சென்ாகவும் வனத் துறையினரிடம் கிராமத்தினா் புகாா் தெரிவித்திருந்தனா். இதனிடையே, திருப்பதியாபுரம் மலையடிவாரத்தில் சிறுத்தையொன்று, முயலை வேட்டையாடத் துரத்தியுள்ளது. இதைப் பாா்த்து அப் பகுதியில் இருந்த
இருந்த இளைஞா், தனது கைப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்துள்ளாா். இந்த விடியோ பதிவு கிராமம் முழுவதும் பரவியது.
சிறுத்தை போன்ற வனவிலங்குகள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்க,
வனத் துறையினா் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சிறுத்தை வேட்டையாடும் விடியோ பதிவு கிராமத்தினரை அச்சமடையச் செய்துள்ளது.