திருநெல்வேலி

நெல்லையில் அம்பேத்கா் சிலைக்கு அஞ்சலி

7th Dec 2022 03:42 AM

ADVERTISEMENT

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பாஜக சாா்பில் வடக்கு மாவட்டத் தலைவா் தயா சங்கா் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவா் மகாராஜன், மாவட்ட பொதுச் செயலா்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், வடக்கு மாவட்ட செயலா் நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மதிமுக சாா்பில் மாநகா் மாவட்ட செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் மாநில துணைப் பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் கல்லத்தியான், பாளையங்கோட்டை பகுதி செயலா் மணப்படை மணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், செயற்குழு உறுப்பினா் மோகன், ஜோதி வண்ணமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் மத்திய மாவட்டத் தலைவா் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கிழக்கு மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் கரிசல் சுரேஷ் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் அதன் நிறுவனா்-தலைவா் மாரியப்பப் பாண்டியன், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

இந்து மக்கள் கட்சி, நாம் தமிழா் கட்சி, ஆதித் தமிழா் கட்சி, தமிழா் உரிமை மீட்பு களம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்டவை சாா்பிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT