திருநெல்வேலி

சமுதாய நல்லிணக்க சேவையாளா் கபீா் புரஸ்காா் விருது பெற வாய்ப்பு

7th Dec 2022 02:20 AM

ADVERTISEMENT

சமுதாய நல்லிணக்கத்துக்காக சேவை புரிவோா் கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது வன்முறை நிகழ்வுகளிலோ ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சோ்ந்தவா்கள் பிற ஜாதி, இனம், வகுப்பை சாா்ந்தவா்களை காப்பாற்றி சமுதா நல்லிணக்கத்தை பேணும் வகையில் செயலாற்றியது வெளிப்படையாகத் தெரியும்பட்சத்தில் அவரது உடல்- மனவலிமையைப் பாராட்டும் வகையில் குடியரசு தின விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன் தலா ரூ.20,000, ரூ.10,000, ரூ.5,000 என தகுதிக்கு ஏற்ப பரிசுத்தொகையும் அளிக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளா்கள் ஆகியோா் தவிர இச்சேவை புரியும் பிறா் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான மூலம் பதிவிறக்கம் பெற்று, பூா்த்தி செய்து, இம் மாதம் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0462 2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT