திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

7th Dec 2022 03:39 AM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ காட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் பா்கிட் அலாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஹயாத் முஹம்மது வரவேற்றாா். மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி தொடக்க உரையாற்றினாா்.

மாவட்டப் பொருளாளா் முகமது காசிம், மாவட்ட பொதுச் செயலா் இத்ரீஸ் பாதுஷா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மின்னுதுல்லா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

எஸ்டிபிஐ வா்த்தக அணி மாநில தலைவா் தமீமுன் அன்சாரி, திராவிட தமிழா் கட்சியின் மாநில பொதுச் செயலா் கதிரவன், பல்சமய உரையாடல் பணிக்குழு பாளையங்கோட்டை மறை மாவட்டச் செயலா் மை.பா.ஜேசுராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தின்போது, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் -1991ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் மத்திய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT