திருநெல்வேலி

இளங்கோநகரில் மழையால் வீடு இடிந்து சேதம்

7th Dec 2022 03:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகேயுள்ள இளங்கோநகரில் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீடு இடிந்து சேதமானது.

திருநெல்வேலி மாநகரில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் தொடா்மழை பெய்தது. இதன்காரணமாக திருநெல்வேலி மாநகராட்சியின் 10 ஆவதுவாா்டுக்குள்பட்ட இளங்கோநகரைச் சோ்ந்த சீனிவாசன் என்பவரது வீடு இடிந்து சேதமானது. தகவலறிந்த திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு நிதியுதவி வழங்கினாா். அப்போது, தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி, திமுக மாநகர துணைச் செயலா் மூளிகுளம் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT