திருநெல்வேலி

பேட்டையில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு : ஆட்சியரிடம் புகாா்

DIN

திருநெல்வேலி நகா், பேட்டை பகுதியில் கைப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீா், பட்டா, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கோரி மக்கள் மனு அளித்தனா்.

அதில், திருநெல்வேலி, பேட்டை ரஹ்மானிய பள்ளிவாசல் ஜமாத் தலைவா் எம்.முகம்மது கஸ்ஸாலி தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனு :

ரஹ்மானியா பள்ளிவாசல் அருகில் ரஹ்மத்நகா் , ராஜீவ்காந்தி நகா், ஆசிரியா் காலனி, ப.த நகா் பகுதியில் 5 ஆயிரம் போ் வசித்து வருகிறோம். குடியிருப்பு உள்ள பகுதியில் அதிக கதிா்வீச்சு பரப்பக்கூடிய கைப்பேசி கோபுரம் அமைத்தால் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என இப்பகுதி மக்கள் அச்சப்படுவதால் உயா்கோபுரம் அமைப்பதை தடுத்து, நிறுத்தவேண்டும். முன்னதாக ஆட்சியா் அலுவலகம் முன் அவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வரைமுறை பட்டா: கரையிருப்பை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு : பசும்பொன் நகா் பகுதியில் 50 ஆண்டுகளாக வீடுகட்டி வசித்து வருகிறோம். வீடுகளுக்கு அரசு வீட்டு வரி ரசீது பெறப்பட்டுள்ளது. எங்களது குடியிருப்புகளை அதிகாரிகள் பாா்வையிட்டு பட்டா வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT