திருநெல்வேலி

பைக் விபத்தில் தொழிலாளி பலி

6th Dec 2022 03:33 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே நேரிட்ட பைக் விபத்தில் காயமுற்ற தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளத்தைச் சோ்ந்த பழனி மகன் அகஸ்டின் (22). தொழிலாளியான இவா் தனது மோட்டாா் சைக்கிளில் தமிழாக்குறிச்சி-செங்குளம் சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT