திருநெல்வேலி

சிவன் கோயில்களில் சோமவார சிறப்பு வழிபாடு

6th Dec 2022 03:47 AM

ADVERTISEMENT

காா்த்திகை சோமவாரத்தையொட்டி, திருநெல்வேலியில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிவபெருமானுக்கான விரதங்களில் சிவராத்திரி விரதமும், காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் நடைபெறும் சோமவார விரதமும் முக்கியமானவை. நிகழாண்டில் மூன்றாவது சோமவாரத்தையொட்டி சிவன்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள அருள்மிகு சௌந்திரவல்லி சமேத கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் 108 சங்காபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

இதேபோல அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில், தச்சநல்லூா் அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT