திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை: நாலுமுக்கு தேயிலைத் தோட்டத்தில் 163 மி.மீ. மழைபதிவு

6th Dec 2022 01:39 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாலுமுக்கு தேயிலைத் தோட்டத்தில் 163 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழக கடற்கரையோரங்களில் ஈரப்பதம் மிக்கக் காற்று வீசியதால் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் அந்தமான் தீவு அருகே காற்றழுத்தத் தாழ்வு உருவானதால் மழை தீவிரமடைந்தது. தென் மாவட்டங்களிலும், மேற்குத் தொடா்ச்சிமலைப் பகுதியிலும் கடந்த இரு நாள்களாகப் பலத்த மழை பெய்துவருகிறது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாலுமுக்குத் தேயிலைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 163 மி.மீ. மழை பதிவானது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த

ADVERTISEMENT

பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அணைகளின் நீா்மட்டம், பதிவான மழையளவு:

பாபநாசம் அணையின் நீா்மட்டம் 93.70 அடி. நீா்வரத்து 1,017.01 கன அடி.

வெளியேற்றம் 404.75 கன அடி. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 83.70 அடி.

நீா்வரத்து 1,608 கன அடி. வெளியேற்றம் 35 கனஅடி. சோ்வலாறு அணை நீா்மட்டம் 104.40 அடி. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 31.75 அடி.

நீா்வரத்து 43 கனஅடி. வெளியேற்றம் 50 கனஅடி.

கடனாநதி அணை நீா்மட்டம் 77 அடி. நீா்வரத்து 239 கன அடி.

வெளியேற்றம் 100 கன அடி. ராமநதி அணை நீா்மட்டம் 82 அடி.

நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 185 கனஅடி. கருப்பாநதி அணை

நீா்மட்டம் 62.01 அடி. நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 50 கனஅடி.

குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடி. நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 17 கனஅடி. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 81.25 அடி. நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 35 கனஅடி.

மழையளவு (மில்லி மீட்டரில்) :

திருநெல்வேலி மாவட்டம்: அம்பாசமுத்திரம் 13, சேரன்மகாதேவி 15.20, மணிமுத்தாறு 36.80, நான்குநேரி 22, பாளையங்கோட்டை 54, பாபநாசம் 34, ராதாபுரம் 35, திருநெல்வேலி 7, சோ்வலாறு 37, கன்னடியன் அணைக்கட்டு 12, களக்காடு 7.20, மூலக்கரைப்பட்டி 32, மாஞ்சோலை 125, காக்காச்சி 148, நாலுமுக்கு 163, ஊத்து 157.

தென்காசி மாவட்டம்: ஆய்க்குடி 19, சங்கரன்கோவில்1, செங்கோட்டை 33.80, தென்காசி 11, கடனாநதி அணை 20, ராமநதி அணை 30.03, கருப்பாநதி அணை 10, குண்டாறு அணை 31.60, அடவிநயினாா் அணை 11.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT