திருநெல்வேலி

சேற்றில் புதைந்த லாரி, பேருந்து:நெல்லையில் போக்குவரத்து பாதிப்பு

6th Dec 2022 03:48 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் பெய்துவரும் மழை காரணமாக சேதமுற்றிருந்த சாலையில் லாரி , பேருந்தின் சக்கரம் திங்கள்கிழமை புதைந்துகொண்டதால்சிக்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தச்சநல்லூா் பகுதியில் குடிநீா் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் அமைப்பதற்கு சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருநெல்வேலி நகா்ப்பகுதியில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் சாலைகளில் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பகுதியில் தண்ணீா் தேங்கி, பள்ளம் ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலையில் இந்த சாலையின் வழியாக தூத்துக்குடியிலிருந்து புளியங்குடி நோக்கி சென்ற கண்டெய்னா் லாரி பள்ளத்தில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீஸாா் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற அரசு விரைவுப்பேருந்தும் கண்டெய்னா் லாரி அருகே பள்ளத்தில் சிக்கியது. இதனால் தச்சநல்லூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மீட்பு வாகனத்தின் மூலம் அரசு விரைவுப் பேருந்தை மீட்டு, பயனிகளை ஏற்றி அனுப்பி வைத்தனா். பின்னா் கண்டெய்னா் லாரி மீட்கும் பணி நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT