திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஆதாா் இணைப்பு சிறப்பு மையம்

6th Dec 2022 03:48 AM

ADVERTISEMENT

மேலப்பாளையத்தில் மின்சாரம் வாரியம் சாா்பில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

மேலப்பாளையம் பிரிவு 1 , 2 அலுவலகங்களில் ஏற்கெனவை சிறப்பு மையம் செயல்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி உத்தரவின்பேரில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மின் இணைப்பு- ஆதாா் எண் இணைபு சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. அந்த மையத்தை திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட மின் செயற்பொறியாளா் முத்துக்குட்டி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இதில், உதவி செயற்பொறியாளா் தங்கமுருகன், உதவி மின் பொறியாளா்கள் காா்த்திக்குமாா் , ரத்தினவேணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT