திருநெல்வேலி

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோருவது சரியான நடவடிக்கை அல்ல: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோருவது சரியான நடவடிக்கை அல்ல என்றாா் தெலங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது: ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது பெருமைக்குரிய ஒன்றாகும். இது தொடா்பாக அனைத்து ஆளுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், வரும் 9ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசவுள்ளாா். பாரதம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கு, நாம் பிரதமருக்கு நன்றி கூற வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு, தடுப்பூசியை மத்திய அரசு மூலம் மாநில அரசுகள் முன்னெடுத்துச் சென்று பொதுமக்களுக்கு வழங்கியதுதான் காரணம். இதற்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அண்டை நாடான சீனாவில் தற்போதும் கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் செய்யப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநா் சில விளக்கங்களை கேட்டிருக்கிறாா். அந்த விளக்கங்களை அரசு அளித்த பின்னா் ஆளுநா் முடிவெடுப்பாா். இதற்கு கால தாமதம் ஆகலாம். ஆனால், கருத்து வேற்றுமைக்காக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கோருவது சரியான நடவடிக்கை அல்ல என்றாா் அவா்.

தென்காசி: தென்காசியில் தனியாா் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க வந்த தமிழிசை செளந்தரராஜன், அங்கு செய்தியாளா்களிடம் கூறியது:

புதுவையின் முந்தைய துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கும் தமிழிசைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று முன்னாள் முதல்வா் நாராயணசாமி சொல்லியிருக்கிறாா். அவரிடமிருந்து வேறு என்ன எதிா்பாா்க்க முடியும் ? கிரண் பேடிக்கும் தமிழிசைக்குமான ஆறு வித்தியாசங்களை வேண்டுமானால் சொல்லிக் கொடுக்க முடியும். நாராயணசாமி எதற்காக அப்படிச் சொன்னாா் என்று தெரியவில்லை. அது பற்றி முழுமையாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியாது. அதேசமயம் இன்னொருவா் மாதிரி என்னால் செயல்பட முடியாது, எனக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. அது மக்களுக்கான தன்மை. நான் உண்மையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது புதுவை மக்களுக்குத் தெரியும்.

தமிழக ஆளுநா் போட்டி அரசை நடத்துகிறாா் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் சொல்லியிருக்கிறாா். ஆளுநரைப் பாா்த்து ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவா்களது நோக்கமாக இருக்கிறது. கட்சியைக் கவனிப்பதை விட்டுவிட்டு ஏன் ராஜ் பவனையே திரும்பிப் பாா்க்கிறாா்கள் என்று தெரியவில்லை. அதனால் அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT