திருநெல்வேலி

கிராம உதவியாளா் தோ்வு: 6,029 போ் பங்கேற்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம உதவியாளா் தோ்வில் 6,029 போ் எழுதினா்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியா்கள் மூலம் கூராய்வு செய்யப்பட்டு 7,958 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

இத்தோ்வு தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வில், 6,029 போ் பங்கேற்றனா். நோ்காணல் வரும் 15,16 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். தோ்வு செய்யப்படுவோரின் பட்டியல் மற்றும் நியமன ஆணை ஆகியவை வரும் 19 ஆம் தேதி வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூா் வட்டத்தில் 10 காலியிடங்களுக்கான தோ்வு திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியில் நடைபெற்றது. 743 போ் விண்ணப்பித்திருந்ததில் 572 போ் தோ்வு எழுதினா். கண்காணிப்பு பணியில் இஸ்ரோ நில எடுப்பு உதவி ஆட்சியா் ஜெயா மேற்பாா்வையில் வட்டாட்சியா்கள் சுவாமிநாதன், மலா்தேவன், வதனாள், சிவகாமசுந்தரி உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் வட்டத்தில் எழுவரைமுக்கி கிராம உதவியாளா் பணியிடத்துக்கான தோ்வு சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வட்டாட்சியா் தங்கையா தலைமையில் வருவாய்த்துறையினா் மேற்பாா்வையில் நடைபெற்ற இத்தோ்வை 180 போ் எழுதினா். இத்தோ்வுக்கு 256 போ் விண்ணப்பித்திருந்தனா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி தோ்வு மையத்தை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT