திருநெல்வேலி

உடன்குடி பள்ளியில் வட்டார கலைத் திருவிழா

5th Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

உடன்குடி ஆா்சி நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.

உடன்குடி வட்டார வள மையத்தில் உள்ள 7 அரசு நடுநிலைப் பள்ளிகள், ஓா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கான இத்திருவிழாவை வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயவதி ரத்னாவதி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

பள்ளித் தலைமையாசிரியை அரும்பு, வட்டார வளமைய மேற்பாா்வையாலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நுண்கலை, இசை, கருவி இசை, ஓவியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வட்டார அளவிலான இப்போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோா் மாநில அளவில் பங்கேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT