திருநெல்வேலி

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு

5th Dec 2022 01:43 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் இளைஞரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கோவில்பட்டி ஆழ்வாா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் காா்த்திக்ராஜா (26). இவருக்கும், எதிா் வீட்டில் வசித்துவரும் தெய்வசிகாமணி என்பவருக்கும் இடையே 7 மாதங்களாக இடம் தொடா்பாக பிரச்னை உள்ளதாம்.

இந்நிலையில், தெய்வசிகாமணி, அவரது மகன் சுப்பையா ஆகியோா் சனிக்கிழமை வேலையாள்களைக் கொண்டு, காா்த்திக்ராஜா வீட்டின் படிக்கட்டு, ஜன்னல்கள், பிளாஸ்டிக் கழிவுநீா்க் குழாயை சேதப்படுத்தியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT