திருநெல்வேலி

தூத்துக்குடி வடபாகம் வியாபாரிகள் சங்கக் கூட்டம்

5th Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் வடபாகம் சேதுபாதை சாலை வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் திருமால் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மகாலிங்கம், செயலா் பழனி, பொருளாளா் மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்மாதம்16ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் வியாபாரிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும், மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். துணைச் செயலா் ஸ்டாலின், ஆலோசகா்கள் அழகுமுத்து, சாந்தகுமாா், கோபால், வெற்றிவேல் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT