திருநெல்வேலி

விளாத்திகுளம் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

5th Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு முதல்வரின் மானாவாரி நில மேம்பாடு இயக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநா் கீதா ஏற்பாட்டில் மானாவாரி விவசாயிகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின்கீழ் 2 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

உயிா் உரங்களின் பயன்பாடு, உயிரிப் பூஞ்சாணக் கொல்லி செயல்பாடு, மக்காச்சோள படைப்புழு மேலாண்மை, பயறுவகைப் பயிரில் புதிய ரகங்கள், சூரியகாந்தி, நிலக்கடலை பயிா் சாகுபடி குறித்து வேளாண் அறிஞா்கள், பேராசிரியா்கள் பயிற்சியளித்தனா். இதில், விளாத்திகுளம், வில்வமரத்துப்பட்டி, வேலிடுபட்டி, குளத்தூா், நீராவி புதுப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மானாவாரி விவசாயிகள் பங்கேற்றனா்.

விளாத்திகுளம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளா் தேவசாந்தி, குமரேசன், வேல்முருகன், வேளாண் துறைப் பேராசிரியா்கள் செந்தில்ராஜா, தமிழரசி, சீனிவாசன், சுந்தரலிங்கம், சசிகலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT