திருநெல்வேலி

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

5th Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி ஆனந்தநகா் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி, நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் மேற்பாா்வையில் தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தாளமுத்துநகா் அருகேயுள்ள ஆனந்தநகா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த பொன் உதயா (21) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 6 கிராம் கஞ்சா பொட்டலம், கைப்பேசி, கத்தி, ரூ. 2,100 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT