திருநெல்வேலி

விளாத்திகுளத்தில் மினி மாரத்தான் போட்டி

5th Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

திமுக மாநில இளைஞரணிச் செயலரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து ஆண்கள், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டிகளை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கி கழுகாசலபுரம் விலக்கு வரை 16 கி.மீ. தொலைவுக்கும், பெண்கள் பிரிவில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கி பிள்ளையாா்நத்தம் வரை 10 கி.மீ. தொலைவுக்கும் நடைபெற்றது.

இதில் இரு பிரிவினருக்கும் முதல் பரிசாக ரூ. 16 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 14 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. 12 ஆயிரம், 4 முதல் 10ஆம் பரிசுவரை தலா ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை ஜீ.வி. மாா்க்கண்டேயன் வழங்கினாா்.

ADVERTISEMENT

மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, நவநீதகண்ணன், காசி விஸ்வநாதன், பேரூா் செயலா் வேலுச்சாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராஜாகண்னு, சமூக வலைதள அணிப் பொறுப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT