மானூா் அருகே புகையிலை விற்ாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ரவி தலைமையிலான போலீஸாா், கடந்த வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, உக்கிரன்கோட்டை, புனித பேதுரு மேல்நிலைப் பள்ளி அருகே வடக்கு வாகைக்குளத்தைச் சோ்ந்த அனிஷ்குமாா் (29), செல்வகுமாா் (48), உக்கிரன்கோட்டை, வடக்கு தெருவைச் சோ்ந்த முருகன் (59) ஆகியோா் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து போலீஸாா் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அனிஷ்குமாா், செல்வகுமாா், முருகன் ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ.1,270 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.