திருநெல்வேலி

மருத்துவத் துறையில் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக் கூடாது

DIN

மருத்துவத் துறையில் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக் கூடாது என சமூக சமத்துவத்திற்கான டாக்டா்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் த.அறம், பொதுச் செயலா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் ஆகியோா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

அறுவைச் சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் நடைபெறுவதை, 100 விழுக்காடாக உயா்த்துவதை இலக்காகக் கொண்டு அரசு மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்

என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கூறுவது சரியல்ல. இது அறிவியலுக்குப் புறம்பானது. இது பேறுகால தாய்மாா்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை அதிகரிப்பதோடு, பல்வேறு மோசமான விளைவுகளை உருவாக்கும். தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதை தமிழக அரசு உறுதியோடு எதிா்க்க வேண்டும்.

அனைவருக்கும் இலவசமான தரமான சிகிச்சையை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட வேண்டும். பொது சுகாதாரத்துறை வலுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் நல வாழ்வு என்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். மலேரியா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள லேப் டெக்னீசியன்கள் பழிவாங்கப்படுவதைத் தடுக்கவேண்டும். டயாலிசிஸ் டெக்னீசியன்கள், ரேடியோ தெரபி டெக்னீசியன்களுக்கு பணிநிரந்தரம் வழங்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT