திருநெல்வேலி

அரசுப் பள்ளிகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள்: ஆட்சியா் தகவல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

சேரன்மகாதேவி பெரியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐசிஐசிஐ வங்கி பவுன்டேஷன் சமூக பொறுப்பு நிதியின் மூலம் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆட்சியா் வே. விஷ்ணு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மழைநீா் சேகரிப்பின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை நீா்வளம் திட்டத்தில், ஐசிஐசிஐ வங்கி பவுன்டேஷன் சமூக பொறுப்பு நிதி பங்களிப்புடன் இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக ரெட்டியாா்பட்டி, முன்னீா்பள்ளம், தருவை, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், பா்கிட் மாநகா், சீவலப்பேரி, மானூா், கம்மாளங்குளம், நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடா் பள்ளி ஆகிய 10 அரசு பள்ளிகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பள்ளிகளில் 2200 சதுர அடியில், 5 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அப்பகுதிகளின் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து வீரவநல்லூா் பாரதியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, தருவை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை குமாா், பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரகுமாா், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வம், ஊராட்சித் தலைவா் இளையபெருமாள், தலைமையாசிரியா்கள், ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT