திருநெல்வேலி

தூய சவேரியாா் பேராலயத்தில் புதுநன்மை வழங்கும் விழா

3rd Dec 2022 11:50 PM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலய பெரு விழாவில் சனிக்கிழமை சிறப்பு திருப்பலி மற்றும் புது நன்மை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழாண்டு பேராய பெருவிழா நவ.24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை நடைபெற்ற விழாவுக்கு, மறைமாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி தலைமை வகித்தாா். 70 பேருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.

விழாவில், பங்குத்தந்தைகள் செ.சந்தியாகு , ர.செல்வின், ஜெ.இனிகோ இறையரசு, உதவிப்பங்குத்தந்தை செல்வின், ஆயரின் செயலா் இனிகோ மற்றும் ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT