திருநெல்வேலி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி: விழிப்புணா்வை ஏற்படுத்த பிரசார வாகனம்

3rd Dec 2022 02:12 AM

ADVERTISEMENT

மின் வாரியம் சாா்பில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து இம்மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் குருசாமி உத்தரவின்படி பிரசார வாகனம் மூலமாக துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, உதவி செயற்பொறியாளா் எட்வா்டு பொன்னுசாமி தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் சங்கரன் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் சு. முத்துகுட்டி பிரசார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

பாளையங்கோட்டை துணை கோட்ட உதவி மின் பொறியாளா்கள் வீரபுத்திரகுமாா், செல்வம், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த பிரசார வாகனம் சமாதானபுரம், சாந்தி நகா், வண்ணாா்பேட்டை, வி.எம்.சத்திரம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT